FLASH NEWS: “கருணாநிதி மாதிரி இல்ல… ஸ்டாலின், உதயநிதியை பார்க்கவே முடியல”…. கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

கருணாநிதி தனது ஆட்சிக்காலத்திலும் கட்சி நிர்வாகத்திலும் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் பேணிவந்த நெருக்கமான பிணைப்பு, தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் இல்லை என்ற அதிருப்திக் குரல்கள் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. முக்கியப் பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் விவகாரங்கள் குறித்துப் பேசக்கூட உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், கட்சியின் பலமாக இருக்கும் தொண்டர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெறும் தேர்தல் நேர பிரச்சாரமாக இல்லாமல், தலைவர்கள் தங்களை நேரடியாகத் தேடிவந்து குறைகளைக் கேட்டறிந்தால் மட்டுமே கட்சியினரிடையே உண்மையான புத்துணர்ச்சியும், களத்தில் தீவிரமாகப் பணியாற்றும் ஆர்வமும் மீண்டும் மலரும் என்பதே அடிமட்ட நிர்வாகிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.