EPS ஷாக்..! நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்காவிட்டால்… தனித்து போட்டியிடுவோம்… அதிமுகவுக்கு செக் வைத்த கட்சி..!!

By Soundarya on பங்குனி 26, 2026

Spread the love

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி, தொகுதிப் பங்கீட்டில் தங்களுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால் கடும் அதிருப்தியில் உள்ளது. தாங்கள் 4 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், ஒரே ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கியது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூவை ஜெகன்மூர்த்தி (ரூசேந்திரகுமார்) தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வரவில்லை என்றால், வரவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிலவும் அதிருப்தியைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.