“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் ‘மேட் இன் பாகிஸ்தான்’ என்ற முத்திரை மறைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். மோரியா கோசாவி கோவில் வளாகத்தில் நடந்த சங்கஷ்டி சதுர்த்தி திருவிழா சந்தையில் இந்த பெட்சீட்டை அவர் வாங்கியுள்ளார். வாங்கும் போது சாதாரணமாக இருந்த அந்த துணியை, வீட்டிற்கு வந்து துவைத்த பிறகுதான் அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தயாரிப்பு லேபிள் வெளியே தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுகுறித்த வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் எப்படி மகாராஷ்டிராவின் உள்ளூர் சந்தைக்கு வந்தது?” என்று அவர் கேள்வி எழுப்பிய அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

இதனைத் தொடர்ந்து, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல்துறை இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு எங்கிருந்து வந்தது, யார் இதனை சப்ளை செய்தது மற்றும் இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கும் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இதேபோல சாம்பாஜிநகரில் பாகிஸ்தான் லேபிள் ஒட்டப்பட்ட அழகுசாதனப் பொருட்களை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.