“அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு” படிக்கட்டில் சறுக்கி விழுந்த சசி தரூர்.. மின்னல் வேகத்தில் ஓடிவந்து உதவிய அகிலேஷ் யாதவ்… நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி வீடியோ..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) படிக்கட்டுகளில் இறங்கி வந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி கீழே விழச் சென்றார். அந்த சமயம் அவருக்கு மிக அருகில் நடந்து வந்து கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் முன்னேறி சசி தரூரைத் தாங்கிப் பிடித்தார். அருகில் இருந்த மற்ற எம்.பி.க்களும் ஊழியர்களும் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவி செய்தனர்.

 

   
View this post on Instagram

 

A post shared by Asian News International (@ani_trending)

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் சசி தரூருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. அகிலேஷ் யாதவ் மற்றும் அங்கிருந்தவர்களின் உதவியால் உடனடியாகத் தனது சமநிலையை மீட்டெடுத்த தரூர், புன்னகையுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தனது நடையைத் தொடர்ந்தார். அரசியல் ரீதியாக வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இக்கட்டான நேரத்தில் சக உறுப்பினருக்கு உதவிய அகிலேஷ் யாதவின் மனிதாபிமானச் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.