தோலுக்கு மேல் வளர்ந்த பெண் இருக்கும் போது, இரண்டாவது திருமணம் ஆன சில மாதத்தில் கர்ப்பமான ஷாரிக் மனைவி மரியா… வைரலாகும் வீடியோ..!

By Nanthini on மாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் தான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Uma Riyazkhan Son Shariq Wedding Photos | சாரிக் ரியாஸ்

   

இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இவர் பென்சில், டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போதும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

   

Shariq & Maria: ஷாரிக் ரொம்ப ரொமாண்டிக்.. எங்களோட முதல் முத்தம்.. மரியா சொன்ன சீக்ரெட்! | Maria open up about his husband Shariq haasan in her recent interview - Tamil Filmibeat

 

இந்த நிலையில் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விவாகரத்து ஆகணும்னு நினைக்கிறாங்க. கஷ்டத்தில் மனைவி...திருமணத்திற்கு பின் புலம்பிய ஷாரிக் - விடுப்பு.கொம்

சாரிக்  திருமணம் செய்துள்ள மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அதனை அறிந்து தான் ஷாரிக் மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த குழந்தையையும் தற்போது தங்களுடன் தான் வைத்து பார்த்துக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களை ஆன நிலையில் தற்போது ஷாரிக் மற்றும் மரியா தம்பதியினர் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி உள்ளனர். அதாவது மரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோவாக வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.