தனுஷ் என்கூட நடிக்க தயங்கினாரு.. தன்வினை தன்னை சுடும்னு அப்போ தான் புரிஞ்சிட்டு.. நடிகர் பார்த்திபன் ஷேரிங்ஸ்..!

By Nanthini on மாசி 22, 2025

Spread the love

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவிலும் நடிப்பு இயக்கம் என பிசியாக உள்ளார்.

கள்ள சாவுக்கு... எதுக்கு நல்லச் சாவு-நடிகர் பார்த்திபன் கண்டனம் | A fake death... why a good death-Actor Parthiban condemns

   

இந்நிலையில் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் நான் பண்ண வேண்டியது. வெற்றிமாறன் சார் என்கிட்ட வந்து பேசிட்டு இருந்தாரு. அந்தப் படத்துல இன்னொரு கேரக்டர் பண்றதுக்கு என்னிடம் வெற்றி மாறன் சார் பேசிட்டு இருந்தாரு. அப்போ வயதானவரா நடிக்க என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன். பிறகு தனுசும் நானும் இணைந்து படம் பண்ற ஐடியா எனக்கு இருந்தது. அதற்காக ஒரு ஹோட்டலில் சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போ வெற்றிமாறன் சார் தனுஷ் உங்க கூட படம் பண்ண ரொம்ப தயங்குறாரு.

   

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 21 | குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை, ஆடுகளம் பேட்டைக்காரன் - Analysis of VIS Jayapalan role in Aadukalam

 

 

ஏனென்றால் சீனியர் நடிகர் நீங்க அதனால உங்க கூட எப்படி பண்றது என்று அவர் யோசிக்கிறார் என சொன்னாரு. அப்போதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு தன்வினை தன்னைச் சுடும். அதாவது புதிய பாதை திரைப்படம் வெளியான பிறகு ஸ்ரீதர் சார் என் கூட படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் அவரை ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லி பேசினேன். ஹிந்தியில் ஷாருக்கானும் தமிழில் நானும் அந்த கதாபாத்திரத்தை பண்ணுவதாக இருந்தது.

தனுஷை வைத்து ஆராய்ச்சி செய்ய நினைத்த பார்த்திபன்… தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்த நடிகர்… இதெல்லாம் நடந்திருக்கா??

ஆனால் அவ்வளவு பெரிய டைரக்டர் கூட நாம்ப எப்படி பண்ண முடியும் என்று நான் யோசித்தேன். ஏனென்றால் ரஜினி சார் செய்கிற சில வேலைகளை கூட ஸ்ரீதர் பைத்தியக்காரத்தனமா இருக்கு என்று பலமுறை திட்டியிருக்கிறார். நிறைய டைரக்டர்கள் ஸ்ரீதர் சார் குணத்தை பற்றி சொல்லி சொல்லி எனக்குள்ள ஒரு பயம் வந்துருச்சு. இவர்கிட்ட போய் நாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது என்று யோசித்து அன்னைக்கு ஸ்ரீதர் சார் கூட படம் பண்ண மாட்டேன் என்று சொன்ன. அதுதான் இன்னைக்கு நமக்கு நடந்திருக்கு என்று தனுஷ் வேண்டாம் என்று சொல்லியதும் நினைத்துக் கொண்டேன் என பார்த்திபன் பேசியுள்ளார்.