பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘சுத்தம் என்பது நமக்கு’ பாடலுக்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போது நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக ஆரம்பத்தில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி ஆரம்பித்தது. 100 நாட்கள் ஓடக்கூடிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது போட்டியாளர்களிடையே நிறைய பிரச்சனைகள் சண்டைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மட்டுமின்றி சந்தோஷத்திற்கும்,ஒற்றுமைக்கும் கூட இடம் கொடுத்து வருகிறார்கள் ஹவுஸ்மேட்கள். இவர்கள் வீட்டில் நான்கு குழுக்களாக பிரிந்து செயல்பட்டாலும், மொத்த ஹவுஸ்மேட்கழும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள்.
டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து விடம் சண்டை இட்டார் தனலட்சுமி, ஆயிஷாவே வாடி போடி என அசிங்கமாக பேசினார் அசிம். மேலும் விக்ரமனிடம் வாடா போடா என்றும் கூறி சண்டை இழுத்தார். அசல் கோளாறு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் தனலட்சுமிக்கும் அசல் கோளாறுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை என்று பிக் பாஸ் நிகழ்ச்சி போர்க்களமாகவே காணப்படுகிறது.

இதற்கிடையில் ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு நான் செல்ல வேண்டும் என்று பிக் பாஸில் கூறியது என இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஒளிக்கப்பட்ட ‘சுத்தம் என்பது நமக்கு’ என்ற பாட்டுக்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடனமாடியுள்ளனர்.
இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் தங்களது கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Whole Team Dancing in BiggBox House #GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/86wxrO34eb
— GP Muthu Army (@drkuttysiva) October 21, 2022
