மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தமிழ் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். மதுரை வீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து சகாப்தம் படைத்தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறுகையில், என் அப்பா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது சாதாரண விஷயம் அல்ல. சரியான இயக்குனர் அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
