தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் அம்பிகா. ரஜினி கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, விஜயகாந்த் இறந்ததுக்கு அப்புறம் அவரோட பையன் சண்முக பாண்டியன் சினிமாவின் நடிச்சிட்டு இருக்கார். ஆரம்பத்துல விஜயகாந்த் விஜய்க்கு சினிமாவில் எவ்வளவோ உதவிகள் பண்ணினார்.
இப்போ வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்த் என்னோடு அண்ணன்னு பேசுறீங்க. அவர் பையன் சண்முக பாண்டியனுக்கு, என்னோட படத்துல நீ ஒரு கேரக்டர் பண்ணு, இல்லன்னா உன்னோட படத்துல நான் ஒரு பாட்டு இல்லன்னா ஒரு பைட் பண்றேன், என்னோட அண்ணன் விஜயகாந்துக்கு பண்றேன்னு ஏன் செய்யல? இப்ப மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வருது? அப்போ விஜய்யும் மத்த அரசியல் மாதிரி நாடகம் பண்றார். காரியம் ஆக மட்டும் உங்களுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார். அதுவும் இப்போதான் தேவைப்படுகிறார் என்று நடிகை அம்பிகா கோபமாக பேசியிருக்கிறார்.
