ஷங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். படம் இயக்குவது மட்டுமல்லாமல் எஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஷங்கர். 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஷங்கர் 2000 காலகட்டத்திற்கு பிறகு பாய்ஸ், அந்நியன், எந்திரன், எந்திரன் 2.0, ஐ ஆகிய திரைப்படங்களை இயக்கினார் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை.
தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர். தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சங்கர் பட தயாரிப்பாளர் இவரால் சொத்தை இழந்து இருக்கிறார். அது என்ன விவரம் என்பதை பற்றி இனி காண்போம்.
சங்கர் இயற்றிய கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தில்ராஜு. இந்த கேம் சேன்ஜ்ர் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த அளவுக்கு படம் போகவில்லை. இதனால் தில்ராஜு கடனில் சிக்கியிருக்கிறாராம். இவரின் ஒரு முக்கியமான ஒரு ப்ராபர்ட்டியானது பைனான்சியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தில்ராஜு கேம் சேஞ்சர் திரைப்படம் கை கொடுக்கும் என்று நினைத்தால் நினைத்தது ஒன்று நடந்தது என்று இருக்கிறதே என்று அப்செட் ஆக இருக்கிறாராம்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…