தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.
பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார். 25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார். தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான ஷீத்தல் என்ற மலேசிய இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் தற்பொழுது பிரிந்தது தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஷகீலா பப்லு பிரித்விராஜை பேட்டி எடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, நான் எல்லாரையும் நம்பிட்டேன். எல்லோருக்குமே மனசு.. ஷகிலா போல பெருசா இருக்கும்ன்னு நம்பிட்டேன். ஆனால் அவர் அவர்கள் அவர்களுடைய எல்லையில் தான் சிந்திக்கிறார்கள். இப்போதுதான் அதை புரிந்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியது மிகப்பெரிய தவறு. நான் ஷகிலா என்ற தனி மனிதரிடம், தனிப்பட்ட முறையில் எவ்வளவோ விஷயங்களை பேச முடியும்.. அதையெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பெரிய மனசு இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்கிறதா..? என்றால் இல்லை.. எனவே இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும்.. நான் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது’ என்று ஷகீலா கேட்ட கேள்விக்கெல்லாம் கோபமாக பதிலளித்த அவர், மொத்தத்தில் என்ன பிரச்சனை? எதற்காக பிரிந்தார்கள்? என்பதை பற்றி மட்டும் கூறவில்லை. இதோ அந்த பேட்டி…