நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இப்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் சிவராஜ்குமார் எஸ்ஜே சூர்யா மோகன்லால், விஜய் சேதுபதி, சந்தானம் பாலிவுட் நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்க ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருப்பது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஒரு நேர்காணலில் பேசிய போது சமீபத்தில் இந்த தகவலை உறுதியாக தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக இந்த ரகசியத்தை படக்குழு எப்படியோ மறைத்து விட்டதே என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
