“உனக்கு எவ்வளவு தைரியம்டா” பெண்ணின் மார்பகத்தில் கையை வைத்து பேருந்தில் பாலியல் சீண்டல்.. கன்னத்தில் பளார் விட்டு துணிச்சலாக செயல்பட்ட பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பேருந்தில் (KSRTC), தன் அருகில் அமர்ந்திருந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது, ஒரு இளம்பெண் துணிச்சலாக அதனைத் தனது மொபைலில் பதிவு செய்து, அந்த நபரை அடித்துத் தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் நடத்துனர் தலையிட்டு அந்த நபரை பேருந்திலிருந்து இறக்கிவிட்டார்.

பொது இடங்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது, அரசின் பாதுகாப்பு கூற்றுகளுக்கும் கள நிலவரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2025-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளதும், பல வன்கொடுமைகள் புகார் செய்யப்படாமலேயே இருப்பதும் தெரியவந்துள்ளது