இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் மற்றும் ‘கால் ஃபார்வர்டிங்’ மோசடிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்கள் நமது அழைப்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைக்கான ஓடிபி எண்களை நமக்குத் தெரியாமலேயே வேறு எண்களுக்குத் திசைதிருப்ப வாய்ப்புள்ளது.
உங்கள் மொபைல் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் போனில் *#21# என்ற எண்ணை டயல் செய்யுங்கள். திரையில் தோன்றும் செய்தியில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் வசதிக்கு நேராக “Not Forwarded” என்று இருந்தால் உங்கள் போன் பாதுகாப்பாக உள்ளது. ஏதேனும் மர்ம எண்கள் இருந்தால் உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்கள் தகவல்கள் வேறு எண்ணிற்குத் திசைதிருப்பப்படுவது உறுதியானால், உடனடியாக அதனை ரத்து செய்ய ##002# என்ற குறியீட்டை டயல் செய்யுங்கள். இது உங்கள் மொபைலில் உள்ள அனைத்து வகையான கால் ஃபார்வர்டிங் செட்டிங்ஸையும் நீக்கி பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
ஓடிபி வருவதில் தாமதம் அல்லது தேவையற்ற விளம்பர அழைப்புகள் அதிகரித்தால் இந்தச் சோதனையைச் செய்வது அவசியம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என இரண்டிற்கும் பொருந்தும் இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், சைபர் குற்றவாளிகளிடமிருந்து உங்கள் தனிப்பட்ட தரவுகளையும் வங்கிப் பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
