தனியாக இருந்த 75 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… சிக்கிய 55 வயது காமுகன்…. பலாத்காரத்தை மகளே நேரில் பார்த்த அவலம்…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில், 75 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து வந்த இந்த மூதாட்டி, சற்று சுயநினைவு தவறிய நிலையிலும் இருந்துள்ளார். இவரை அவரது மகள் மிகப்பொறுப்புடன் பராமரித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியைக் குளிக்க வைக்கும் போது அவரது உடலில் சில காயங்கள் இருப்பதைக்கண்டு மகள் அதிர்ச்சியடைந்துள்ளார். அதுகுறித்து தாயிடம் கேட்டபோது, சுயநினைவு இல்லாததால் அவரால் எதையும் கூற இயலவில்லை. படுத்த படுக்கையாக இருப்பதால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என மகள் நினைத்திருந்த நிலையில், இந்த கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை மூதாட்டியின் மகள் சில வேலைகளுக்காக வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எதிர்பாராதவிதமாக வீட்டிற்குள் திரும்பிய மகள், அந்த அவலக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அந்த நபரை கைகளுமாகப் பிடித்துச் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்தனர். பின்னர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபரை இழுத்துச் சென்று குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

   

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜி (55) என்பது தெரியவந்தது. குடும்பம் ஏதுமின்றி அப்பகுதியில் தனியாகவும், தான்தோன்றித்தனமாகவும் சுற்றித் திரிந்த அவர், யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமையால் உடலில் பலத்த காயமடைந்த 75 வயது மூதாட்டி உடனடியாக மீட்கப்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் அடுத்தடுத்து நடந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக் கொள்ளக் கூடத் திறனில்லாத, படுத்த படுக்கையாக இருந்த 75 வயது மூதாட்டிக்கு நேர்ந்துள்ள இந்த அவலம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், இளம் பெண்கள் மட்டுமின்றி, முதியோர்களுக்கும் கூட பாதுகாப்பற்ற ஒரு சூழல் நிலவுவது, சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பின் அவசியத்தையும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.