அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… பெற்றோர் செய்த கொடூரம்… ஆண் நண்பருடன் பேசியதற்காக… 14 வயது சிறுமிக்கு பாலியல் சித்திரவதை… குஜராத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆண் நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதை பெற்றோர் அறிந்த பிறகே இந்த சித்திரவதை மற்றும் அத்துமீறல்கள் தொடங்கின என்று அச்சிறுமி காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் கொடுமையைத் தாங்க முடியாமல் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற அச்சிறுமி, காவல் நிலையத்தை அணுகி நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். சிறுமியின் புகாரின் பேரில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், குற்றஞ்சாட்டப்பட்ட அவரது தாய் மற்றும் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பெற்றோரால் இழைக்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.