திக் திக் திக்… மனைவியை அடித்து கொன்ற கணவன்… தாய் பிணமாகக் கிடந்ததை அறியாமல்… விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

பீகார் மாநிலத்தில் தன் தாயின் உடலுக்கு அருகிலேயே ஐந்து வயது சிறுமி ஒருவர் தனது பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையில் அசைவற்று கிடந்த தாய் இனி ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார் என்பதை உணராமல், அந்த பிஞ்சு குழந்தை அறியாமையுடன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.

22 வயதான ஆஷா தேவி என்ற அந்தப் பெண், தனது கணவரால் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவரின் கொடூர தாக்குதலுக்கு பலியான தாய் பிணமாகக் கிடந்ததை அறியாமல், அந்த ஐந்து வயது குழந்தை தன் தாயின் அருகே பொம்மைகளுடன் பொழுதை கழித்துக் கொண்டிருந்த காட்சி காண்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியைக் கொடூரமாகக் தாக்கி உயிரைப் பறித்துவிட்டுத் தப்பியோடிய கணவனைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.