பெங்களூருவில் தனது மனைவி மீது கணவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன ரீதியான சித்ரவதை புகாரை அளித்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக கணவன்மார்கள் மீது மனைவிகள் இத்தகைய புகார்களை அளிப்பதே வழக்கமாக உள்ள நிலையில், இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கணவர் இது தொடர்பாக அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரில், தனது மனைவி அதிகப்படியான பாலியல் தேவைகளை எதிர்பார்ப்பதாகவும், ஆபாச வீடியோக்களை அனுப்பி தன்னைத் துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தோழிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு மனைவி வற்புறுத்துவதாகவும், திருமணத்திற்கு முன்பிருந்த உறவுகள் குறித்துப் பேசி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் உறவுக்கு மறுக்கும் போதெல்லாம் மனைவி தன்னைத் தொடர்ந்து சித்ரவதை செய்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மனைவி தன்னை மது அருந்திவிட்டு நண்பர்களுடன் சுற்றித் திரிவது சகஜமான ஒன்று எனக் கூறி மிரட்டுவதாகவும், தான் வழங்கிய நகைகளைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வருவதாகவும் அந்த நபர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட கணவரின் குற்றச்சாட்டுகள் பெங்களூரு வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
