ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா கோவிலில் தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர்கள் மற்றும் இளம் பெண்களிடம் சில நபர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீக தலத்திற்கு இறைவழிபாடு செய்ய வந்த பெண்களிடம் அரங்கேறிய இந்த அக்கிரமச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அநாகரிகமான சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கண்டனங்கள் குவிந்தன. காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய ஜஸ்வந்த்புரா காவல் துறையினர், இச்செயலில் ஈடுபட்ட இளைஞரைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
https://twitter.com/1K_Nazar/status/2117479454503325829/video/1
கோவில் போன்ற புனிதமான இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
