பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ். இவர் பள்ளியில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து தவறான முறையில் நடந்து கொண்டு, அவர்களின் முடியை இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் போது, 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வினாத்தாள் பெற தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற போது, அவரை உள்ளே அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தித் தனது மடியில் அமர வைத்துச் சில்மிஷம் செய்துள்ளார். மேலும், பள்ளியின் கழிப்பறை பகுதிக்குள் புகுந்து மாணவிகளின் தனியுரிமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்துத் தங்களது பெற்றோரிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார், காமக் கொடூர தலைமை ஆசிரியர் மகேஷ் பிரசாத் யாதவ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.
