கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலையில் பேருந்தில் ஆள் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, நாகர்கோவிலைச் சேர்ந்த நடத்துநர் ராஜலிங்கம் (51) சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது என ரூ.20 பணத்தைக் கொடுத்து மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய சிறுமி நடந்ததை தாயிடம் கூறியதையடுத்து, ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் நடத்துநர் ராஜலிங்கத்தைப் பிடித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
