அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா?… 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி கழிவறையில்.. தூய்மை பணியாளரின் கொடூரம்… பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில், 3-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு கழிவறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி சத்தம் போட முயன்றபோது, அந்த தூய்மை பணியாளர் உடனடியாக மாணவியின் வாயைப் பொத்தியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் கனகபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பள்ளி கழிவறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த தூய்மை பணியாளரை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.