அரியானா மாநிலம் அம்பாலா நகரில் உள்ள துல்கோட் பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினருடன் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளின் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 13 பேர் ஒன்றன் பின் ஒன்றாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இருப்பினும், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்த கட்டிட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
