“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பள்ளியிலிருந்த சிறுமியிடம் அவரது தந்தை அழைப்பதாகக் கூறி அண்டை வீட்டைச் சேர்ந்த அனில் யாதவ் என்ற இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். காட்டிற்குள் வைத்து அச்சிறுமியிடம் கொடூரச் செயலில் ஈடுபட்டபோது சிறுமி அலறியதால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரது தொண்டையை நெரித்துக் கொன்று, உடலை நீரால் நிறைந்த பள்ளத்தில் வீசியுள்ளார்.

சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நர்சிங்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் குழுக்களுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 8 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு காட்டிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. குற்றத்தைச் செய்த அனில் யாதவ், தன் மீது சந்தேகம் வராமல் இருக்க கிராம மக்களுடன் சேர்ந்து சிறுமியைத் தேடுவது போல நாடகமாடியுள்ளார். ஆனால், சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் தொழில்நுட்பச் ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

   

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்கக் கோரி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் மெழுகுவர்த்தி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை அனில் யாதவ் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இக்கொடூர குற்றத்திற்காகச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, வழக்கினை விரைவு நீதிமன்றத்தின் மூலம் நடத்தி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.