அடச்சீ, உனக்கு வெக்கமா இல்லையா?… செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைக்கு வந்த பள்ளி மாணவிகள்… வாலிபர் செய்த கொடூர செயல்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் உமேஸ்வரன் (25) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு மிட்டாய் வாங்கவும் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கும் மாணவிகள் வரும்போது அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு செல்போன் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி ஐந்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமானதை மாணவிகளிடம் மறைத்து மாறி மாறி மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருடைய சுயரூபம் மாணவிகளுக்கு தெரிய வந்ததால் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பழங்குடியின கிராமத்தில் பட்டதாரி வாலிபர் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.