“உனக்கு சாக்லேட் தாரேன் வா” 6 வயது சிறுமியை ஆசைகாட்டி பாலியல் வேட்டை ஆடிய காமுகன்… ஆற்றில் மிதந்த சடலம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

Spread the love

ஐதராபாத் அருகே உள்ள நர்சிங்கியில் 6 வயது சிறுமி சாக்லேட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி காணாமல் போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அங்குள்ள மூசி ஆற்றில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பூசிராவ் (Boosirao) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது,   பூசிராவ் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் ஆதாரங்களை மறைக்க சிறுமியைக் கொலை செய்து ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.

பச்சிளம் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான பூசிராவ் மீது போக்சோ (POCSO) மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

19 seconds ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

4 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

8 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

13 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

26 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

32 minutes ago