நள்ளிரவில் ₹20 மதிப்பிலான மேகி (Maggi) நூடுல்ஸை டெலிவரி செய்ய ₹395 கட்டணம் செலுத்திய வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நள்ளிரவு 12:30 மணிக்கு வந்த இந்த ஆர்டரைக் கண்டு அதிர்ச்சியடைந்த டெலிவரி ஊழியர், வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு, “இவ்வளவு அதிக கட்டணத்தில் அப்படி என்ன விசேஷமான பொருள் பார்சலில் இருக்கிறது?” என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார்.
அந்தப் பெண் அதில் வெறும் மேகி மட்டுமே இருப்பதாகக் கூறியும், டெலிவரி ஊழியரால் அதை நம்ப முடியவில்லை. “வெறும் ₹20 மேகிக்கு ₹400 செலவு செய்கிறார்களே, உள்ளே ஏதேனும் சட்டவிரோதமான பொருட்கள் இருக்குமோ?” என்று அவர் மீண்டும் வினவினார். அதற்கு அந்தப் பெண், ஆர்டர் செய்தவர்களிடம் நிறையப் பணம் இருப்பதாகவும், பயப்படும்படி உள்ளே ஒன்றும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
பணத்தை வாங்குவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, டெலிவரி ஊழியர் அந்தப் பெண்ணிடமே டிஜிட்டல் முறையில் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டார். கிளம்பும்போதும், “யாராவது மேகிக்காக இவ்வளவு செலவு செய்வார்களா?” என்ற வியப்புடனேயே அந்தப் பார்சலை எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம், பணக்காரர்களின் வினோதமான தேர்வுகள் மற்றும் நள்ளிரவு நேர ஆன்லைன் ஆர்டர்களின் விசித்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…