தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக கூட்டணியின் உறுதித்தன்மையைப் பாராட்டிய அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்குத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட ராஜ்யசபா சீட், திமுக கூட்டணியில் இணைந்தவுடன் எவ்வித ஒப்பந்தமுமின்றி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இதுவே உண்மையான அரசியல் பண்பாடு என்று ஸ்டாலின் தலைமையிலான திமுகவைப் புகழ்ந்தார்.
அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்த ஓபிஎஸ், பேரறிஞர் அண்ணா முதல் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் என்றும், ஆனால் தானும் எடப்பாடி பழனிசாமியும் அந்தந்த காலக்கட்டத்தின் சூழலால் நியமிக்கப்பட்ட (Appointment) முதலமைச்சர்கள் மட்டுமே என்ற கசப்பான உண்மையை வெளிப்படையாகப் ஒப்புக்கொண்டார். தனக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆர்.பி.உதயகுமாரின் பெயரைச் சொல்லவே வெட்கமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தன்னை விமர்சிக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தொடக்கத்தைக் கிண்டல் செய்த ஓபிஎஸ், அவர் எப்படி ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றார் என்பதை நினைவுபடுத்தினார். அத்தகைய பதவியைக் கொடுத்த சசிகலாவையே தற்போது எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் என்று சாடினார். எடப்பாடியும் உதயகுமாரும் கையில் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை மொத்தமாக அழித்து, குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் என்றும், அதிமுகவை அழித்த வரலாற்றுப் பெருமை அவர்கள் இருவரையே சாரும் என்றும் குற்றம் சாட்டினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க ‘ஓ.பன்னீர்செல்வம்’ என்ற பெயரில் ஆறு பேரை எடப்பாடி பழனிசாமி தரப்பு களமிறக்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததே அதற்குப் பதில் என்றார். தான் தற்போது திமுகவில் ஒரு சாதாரணத் தொண்டனாக இணைந்துள்ளதாகவும், உழைத்தால் மட்டுமே தனக்குப் பதவி கிடைக்கும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். தனது நீண்டகால அரசியல் பாதையைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது உதயகுமாருக்கோ எந்தவித அருகதையும் இல்லை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…