மனைவியை 120 ஆண்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்…. மயக்க மாத்திரை கொடுத்து கணவன் செய்த கொடூரம்.. கேமராவில் பதிவான ஆபாச வீடியோக்கள்…!

By Nanthini on சித்திரை 15, 2026

Spread the love

மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் ஸ்வீடன் நாட்டில், மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு குற்றச்செயல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் ஓராண்டு காலமாகத் தனது மனைவியைத் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பணத்தாசையினால் உந்தப்பட்ட அந்த நபர், தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி சுமார் 120 ஆண்களுடன் உடலுறவு கொள்ளச் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்ற அந்த நபர் மிகக் கச்சிதமான திட்டங்களைத் தீட்டியுள்ளார். தனது பண்ணை வீட்டிற்குத் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து, அவர்களுக்குத் தனது மனைவியை இரையாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம், அவருக்கு வலுக்கட்டாயமாக மயக்க மாத்திரைகளைக் கொடுத்து இந்தக் குற்றங்களைச் செய்துள்ளார். மேலும், உண்மையை வெளியே சொன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என்றும், கொன்றுவிடுவேன் என்றும் அந்தப் பெண்ணை ஆயுதங்களால் மிரட்டித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.

   

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லாத சூழலை அந்த நபர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். பெண் தப்பிச் செல்லாமல் இருக்க பண்ணை வீடு முழுவதும் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்தி கண்காணித்ததோடு மட்டுமல்லாமல், அநாகரீகமான முறையில் அந்த பாலியல் வன்கொடுமைகளை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், தைரியமாகத் திரட்டி காவல்துறைக்குத் தகவல் அளித்த பின்னரே இந்தச் சங்கிலித்தொடர் சித்திரவதை முடிவுக்கு வந்தது.

   

இந்த வழக்கு தொடர்பாக அந்த 62 வயது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 15 நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்ததாகக் கருதப்படும் 120 ஆண்களில், முதற்கட்டமாக 28 பேரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஒரு நாட்டில், நவீன கால அடிமைத்தனம் போலத் தனது மனைவியையே வியாபாரப் பொருளாக மாற்றிய இந்தச் சம்பவம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.