காசா பகுதி முழுவதிலும் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகின்றது. விமான மூலம் வீசப்படக்கூடிய உணவுப் பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் காரணமாக காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை நிலவுகிறது. இதனை உணர்ந்த சில நாடுகள் விமான மூலம் உணவுப் பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலே இருந்து கீழே வீசுகின்றன.
இதற்காக நீண்ட நேரமாக காத்திருந்து மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டம் நடத்துகின்றனர். இப்படியான நிலையில் தன்னுடைய குழந்தை இரண்டு நாள் பட்டினியாக கிடப்பதாகவும் தான் சேகரித்த உணவை என்னை தள்ளிவிட்டு மற்றொருவர் எடுத்துச் சென்று விட்டதாகவும் பெண் ஒருவர் கூறும் வீடியோ காட்சி வெளியாகி கல்நெஞ்சையும் கரைய வைக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“Airdrops are humiliating.”
🚨BREAKING: At least 151 Palestinians including 89 children have died from starvation in Gaza due to Israel’s siege. Over 1,200 others have been killed while trying to reach aid points in Gaza.@UNRWA warns airdrops are dangerous, and humanitarian… pic.twitter.com/HlHkx5eaUT
— Gaza Notifications (@gazanotice) July 31, 2025
