மெட்டி ஒலி சீரியல் அனைவருக்கும் நினைவில் வருவது, சரோஜா என்ற சரோ கதாபாத்திரம் தான். சேத்தனுக்கு மனைவியாக நடித்த சரோவின் நிஜப்பெயர் காயத்ரி சாஸ்த்திரி. நடிகை காயத்ரியின் பூர்விகம் கர்நாடகம். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில். காயத்ரியின் அண்ணன் சஞ்சய்.
இயக்குனர் சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பாசமலர்’ படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காயத்ரி. பின்னர் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும் நடித்தார். படங்களில் பிஸியான ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, குட்டி பத்மினி ஒரு இந்தி சீரியலில் நடிக்க காயத்ரியை கேட்டுள்ளார்.
பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்தார். திருமுருகன் டைரக்ஷனில் ஏற்கனவே இரண்டு சீரியல்களில் நடித்திருந்தாலும், அவர் மூன்றாவதாக நடித்த ‘மெட்டி ஒலி’ சீரியல் தான் காயத்ரியை சின்னத்திரை ரசிகர்களுக்கு அடையாளப் படுத்தியுள்ளது.
சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காயத்ரி, குழந்தை பிறந்ததும் சீரியல்களுக்கு சின்ன இடைவெளி விட்டிருந்தார். தற்போது குழந்தை சற்று வளர்ந்து விட்டதால், சன் டிவி-யில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘ரோஜா’ சீரியலில், கல்பனா என்ற கதாபாத்திரத்தில், ரோஜாவின் மாமியாராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுதும் அவர் பல சீரியல்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் காயத்ரி. இவர் தற்பொழுது ட்ரெண்டிங் பாடலான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் காவலா பாடலுக்கு சக சீரியல் நடிகைகளுடன் இணைந்து நடனமாடிய அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…