சீரியல் நடிகை வந்தனாவின் கணவர் இந்த பிரபல நடிகரா?.. கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரே வெளியிட்ட புகைப்படம்..!

By Nanthini on ஆகஸ்ட் 24, 2024

Spread the love

சின்னத்திரை சீரியல்களில் அதிக அளவு வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை வந்தனா. இவர் தமிழ் சின்னத்திரையில் ஆனந்தம் சீரியல் மூலமாக முதன் முதலில் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். முதல் சீரியலிலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உருவானது. இவருடைய நடிப்பில் வெளிவந்த தங்கம், காதல் முதல் கல்யாணம் வரை மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் இவர் வில்லியாகவே நடித்த ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு திட்டுக்களை பெற்றார்.

   

சீரியலில் வில்லத்தனத்தை காட்டி இருக்கும் இவர் உண்மையில் அன்பு உள்ளம் கொண்டவர். இதனைத் தொடர்ந்து நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மைக்கேல் தங்கதுரை பர்மா, கனிமொழி மற்றும் ஊமை செந்நாய் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடன கலைஞரும் கூட. ஸ்டார் விஜய் இளைஞர்கள் சார்ந்த கனா காணும் காலங்கள் என்ற நாடகத் தொடரில் நடிகராக அறிமுகமானார்.

   

 

இதனைத் தொடர்ந்து இவர் வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் நடைபெற்ற மிஸ் சின்னத்திரை மற்றும் பாய்ஸ் வெர்சஷ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தனா அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வந்தனா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vandana Michael இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vandanamichael3)