தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார். அவர்களை தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி இணையாக சொல்லப்படுகிறது.
கவுண்டமணி செந்தில் மட்டும் இல்லாமல் மற்ற காமெடி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். அதில் இன்று வடிவேலு மற்றும் விவேக் போன்ற அவரின் அடுத்த கட்ட நடிகர்களும் அடக்கம். ஆனால் அவர்களோடு இணைந்து நடித்தாலும் எப்போதும் தன்னையே ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரமாக அவர் முன்னிறுத்திக் கொள்வார்.
இப்படிதான் கவுண்டமணி விவேக்கோடு சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது விவேக்கின் கதாபாத்திரத்தைப் பார்த்து அதை பாடி ஷேமிங் செய்வது போன்ற ஒரு வசனத்தைக் கவுண்டமணி பேசியுள்ளார். அதில் திரைக்கதையில் இல்லாத வசனமாம். அப்படி அந்த மொமண்ட்டில் பேசிவிடுவது கவுண்டமனியின் வாடிக்கை.
அதனால் அதே படத்தில் மற்றொருக் காட்சியில் நடிக்கும் போது கவுண்டமணியை கலாய்க்கும் விதமாக விவேக் பேசிவிட்டாராம். ஆனால் அந்த counter ஐ கவுண்டமணி ரசிக்கவில்லையாம். இது திரைக்கதையில் இல்லை நீ எப்படி பேசலாம். என விவேக்கை திட்ட ஆரம்பித்துவிட்டாராம். மேலும் இயக்குனரிடம் சொல்லி ‘அவன் பேசிய வசனம் படத்தில் இருக்கக் கூடாது எனவும் சொல்லிவிட்டாராம்’. இதை பல ஆண்டுகள் கழித்து கவுண்டமணியின் பெயரைக் குறிப்பிடாமல் விவேக் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
Goundamani upset about vivek counter dialougue
