விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் முத்தழகு. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக மாலை நேரம் என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீரியல்களில் நடித்ததன் மூலம் இவர் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் தேவ் என்பவரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வரும் வைஷாலி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இந்நிலையில் வைஷாலி பெற்றோருக்கு நேற்று 60ம் கல்யாணம் மிக பிரமாண்டமாக நடைபெற்று உள்ளது.
குடும்பத்துடன் உறவினர்கள் சூழ 60ம் கல்யாணம் நடைபெற்ற புகைப்படங்களை வைஷாலி பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…