சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவ்வாறு சீரியல்களில் நடித்துக் கொண்டே தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடித்தார். இதனைத் தொடர்ந்து தனது 2002 ஆம் ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலர் அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதியின் கணவர் ஒரு பாடி பில்டர். தன்னுடைய பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஸ்ருதியை திருமணம் செய்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் அவர் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக திருமணமான ஒரே வருடத்தில் அவர் உயிரிழந்ததை ஸ்ருதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதன் பிறகு அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியில் வந்து தற்போது மீண்டும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னோட அப்பா அம்மா கோயம்புத்தூர்ல தான் இருந்தாங்க. நான் அவங்கள அடிக்கடி போய் பாத்துட்டு வந்தேன்.

அரவிந்த் போனதுக்கு அப்புறம் நான் அவரோட வீட்ல தங்கிட்டேன். எனக்காக என்னோட அப்பா அம்மா டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு இங்கவே வந்துட்டாங்க. எனக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணிக்கிட்டு இருக்காங்க. என் கணவர் போனதும் என்னை எப்படியாவது மனசு மாத்தி கூட்டிட்டு போயிடனும்னு அவங்க நினைக்கல. அதே மாதிரி தான் என்னோட மாமனார் மாமியாரும் எனக்கு முடிஞ்ச அளவுக்கு துணையாய் இருக்காங்க. அவங்க யாருக்குமே மீடியா பத்தி ஒண்ணுமே தெரியாது.
)
என் கணவர் மறைந்து இரண்டு மாதம் கழித்து என்னுடைய மாமனார் தான் உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை நீ தாராளமா பண்ணு உன் கூட நாங்க இருக்கோம் என்று சொன்னாரு. அதனைப் போலவே என்னுடைய மாமியாரும் நைட் நான் எவ்வளவு லேட்டா ஷூட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்கு போனாலும் எனக்கு சமைச்சு தருவாங்க. அந்த அளவுக்கு எல்லோரும் என்ன பார்த்துக்கிறாங்க என்று ஸ்ருதி உருக்கமாக பேசியுள்ளார்.
