jaya

ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தபின் MGR செங்கோல் கொடுத்தாரா…? அங்கு நடந்ததே வேறு…

By admin on மார்கழி 20, 2024

Spread the love

தமிழ்நாட்டில் யாரும் மறந்து விடாத மறக்க முடியாத பெயர் MGR. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சினிமாவிலும் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் MGR.

   

ஆரம்பத்தில் குடும்ப வறுமையால் மிகவும் வாடிக் கொண்டிருந்த MGR நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆரின் படங்கள் என்றால் சமூக நீதி கருத்துக்கள் ஆக்ஷன் காட்சிகள் திராவிட சிந்தனைகள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். தன்னை ஆதாரத்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.

 

எம்ஜிஆர் அரசியலில் நுழைந்த பின்பு ஜெயலலிதா அரசியலுக்கு வரவில்லை. ஒரு சில காலம் கழித்து தான் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். அப்போது பல எதிர்ப்புகள் இருந்தாலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை ஆதரித்தார். தனது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அவரை அறிவித்தார். அப்படி ஒரு விழா மேடையில் ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளர் என அறிவித்த பின்பு ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் ஒரு செங்கோலை பிடித்திருப்பது போல் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். இந்த புகைப்படத்தில் செங்கோலை எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு தான் வழங்கியிருப்பார் என்ற ஒரு பேச்சு நிலவி வருகிறது.

ஆனால் அது உண்மையல்ல. ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்த பின்பு ஜெயலலிதா அவர்கள் தான் எம்ஜிஆருக்கு அந்த செங்கோலை வழங்குவார். இது பற்றிய ஒரு வீடியோவும் இணையத்தில் இருக்கிறது. இதிலிருந்து எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கவில்லை என்பது நமக்கு தெரிகிறது.