நடிகை சம்யுதா நிறைமாத நிலவே என்ற ஷார்ட் பிலிம்யில் நடித்து புகழ்பெற்றார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு சம்யுதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

சம்யுதாவும் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணுகாத்தும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர். விவாகரத்து பற்றி விஷ்ணுகாந்த் முதலில் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதன் பிறகு சம்யுதாவும் அவர் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

‘இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறி சம்யுதா பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சம்யுதா போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சம்யுதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
