ஜெயலலிதா தெனிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர். மைசூர் சமஸ்தானம் மேல்கோட்டையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோமளவல்லி என்பதாகும். சிறுவயதிலேயே இவரது தந்தை காலமானதால் இவரது தாய் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். அதன் மூலம் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தான் பள்ளியில் நடிக்கும் போதே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்த உடனே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. அதனால் அவர் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை. வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெயலலிதா. இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தொடர்ந்து தனது நளினமான நடிப்பினாலும் நடனத்தினாலும் மக்களை கவர்ந்தவர் ஜெயலலிதா.
படிப்படியாக உயர்ந்த ஜெயலலிதா தமிழில் 130 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதில் அதிகப்படியாக எம்ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடியை மக்கள் வெகுவாக ரசித்து பாராட்டினர். அதற்குப் பிறகு எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு சில நாட்களுக்கு பிறகு அவரது கட்சியில் இணைந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அந்த கட்சியை எடுத்து நடத்தி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறுமுறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. பல பெண்களுக்காக பல சிறந்த திட்டங்களை வழிவகுத்தவர். அதனால் இவரை அம்மா என்றும் புரட்சித்தலைவி என்றும் மக்கள் அன்போடு அழைத்தானர். எம்ஜிஆரை போலவே ஜெயலலிதா அவர்களும் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்து இருக்கிறார்.
ஜெயலலிதா மிகவும் தைரியமான துணிச்சலான சாமர்த்தியமாக பேசக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் சினிமாவில் இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அப்பொழுது எல்லா பிரபலங்களும் அவரை காண வந்திருக்கின்றனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் வரவில்லை. இதை மனதில் வைத்திருந்த இயக்குனர் ஸ்ரீதர் ஒரு பேட்டியின் போது ஜெயலலிதா என்னால் தான் சினிமாவிற்கு வந்தார் நான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் அவரால் CM ஆகியிருக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

ஆனால் அதைக்கூட நினைத்து பார்க்காமல் ஜெயலலிதா நான் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தபோது என்னை பார்க்க வரவில்லை என்று கூறி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர். இதை அறிந்து கடுப்பான ஜெயலலிதா ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில் நீங்கள் தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை மறக்கவில்லை ஆனால் நீங்கள் அறிமுகப்படுத்திய நடிகர்களில் எத்தனை பேர் CMமாக ஆகி இருக்கிறார்கள் என்று ஒரே வார்த்தையில் நோஸ் கட் செய்திருக்கிறார் ஜெயலலிதா.
