பிக்பாஸ் போனது வீணா போகல.. புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரவீனா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

நடிகை ரவீனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆஹா தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் வேற மாதிரி ஆபீஸ் 2 சீசனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சின்னத்திரையில் மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக வலம் வருபவர் ரவீனா தாஹா. 2003 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி சென்னையில் உள்ள மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் தனது நான்கு வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் இந்த சீரியல் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.

   

   

பின்னர் பூவே பூச்சூடவா சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மௌனராகம் 2 சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்தும் அசத்தியிருந்தார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமானார்.

 

அதைத் தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்று வந்த ரவீனாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் வரை நீடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது நடன திறமையை காட்டி இருந்தார்.

இந்த நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரவீனா அவபோதுதான் டான்ஸ் ஆடும் வீடியோவையும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மணியுடன் காதல் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரவீனா கமிட்டாகியுள்ள புதிய தொடர் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவர் ஆஹா தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் வேற மாதிரி ஆபீஸ் 2 என்ற சீசனில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.