பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் தனது இரண்டாவது குழந்தையின் முகத்தை முதன்முறையாக வெளி உலகத்திற்கு காட்டி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதேவி அசோக். தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவுக்கு இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் சின்னத்திரைக்கு தாவிய ஸ்ரீதேவி அசோக் முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருக்கின்றார். 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி ராஜா ராணி சீரியல் மூலமாக மேலும் பிரபலமானர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் நடித்து வருகின்றார். மோதலும் காதலும் என்ற சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கர்ப்பமாக இருந்தார். இதனால் தனது டெலிவரி முன்னிட்டு அந்த சீரியலில் இருந்து விலகினார். நடிகை ஸ்ரீதேவி அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே சித்தாரா என்கின்ற ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவி கடந்த மாதம் 27ஆம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சிருஷ்டி என்று பெயர் வைத்திருக்கின்றார்.

குழந்தை பிறந்து ஒரு மாதமாக போகும் நிலையில் குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த ஸ்ரீதேவி, தற்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். மேலும் தனது குழந்தையின் முகத்தை வெளி உலகத்திற்கு முதன்முறையாக காட்டி இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
