சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி சஞ்சீவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர். பிரபல நடிகையான ப்ரீத்தி சஞ்சீவ் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர்.

சிறுவயதிலிருந்து அவர் கலைத்துறையில் இருக்கிறார். 5 வயது இருக்கும் போது ப்ரீத்தி தூர்தர்ஷனுக்காக கண்மணி பூங்கா என்ற நிகழ்ச்சியில் முதன் முதலாக நடனம் ஆடினார். பல இசை வல்லுனர்களான ராமையா பிள்ளை, லட்சுமணன், முருகேசன் பாலமுரளி கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து பிரீத்தி வேலை பார்த்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப்ரீத்தி சஞ்சீவ் வெற்றி பெற்றார். பந்தம், வீட்டுக்கு வீடு லூட்டி, பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் ப்ரீத்தி நடித்துள்ளார் ப்ரீத்தி விசுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். பின்னர் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவை பிரீத்தி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்த ப்ரீத்தி சினிமாவில் நடிக்கவில்லை.

ஆனால் நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தினால் சமர்பணா நடன பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் ப்ரீத்தி வீணை வாசிப்பதிலும் திறமையானவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரீத்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற கண்ணான கண்ணே சீரியலில் பிரீத்தி நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் மற்றும் மூன்று முடிச்சு ஆகிய சீரியல்களை பிஸியாக நடித்து வருகிறார்.

