Skincare இல் வெளிவந்த முதல் தயாரிப்பு… 150 வருட பழமையான Vaseline இன் வரலாறு தெரியுமா…?

By admin on புரட்டாதி 14, 2024

Spread the love

இன்று பெண்களுக்கு முக்கியமான அத்தியாவசிய பொருளாக மேக்கப் ஸ்கின் கேர் ஆகிவிட்டது. இன்று ப பிராண்டுகள் இருந்தாலும் முதன் முதலாக ஸ்கின் கேரில் வெளிவந்த பிராண்ட் என்னவென்று தெரியுமா? அதுதான் Vaseline. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

1859 ஆம் ஆண்டு வேதியலாளர் ராபர்ட் செஸ்ப்ரோ பென்சிலனியாவின் டைட்டஸ்வில்லில் எண்ணெய் வகைகளில் இருந்து எடுக்கப்படும் எரிபொருள்களில் என்ன புதிய பொருட்கள் உருவாக்கலாம் என ஆராய்ச்சி செய்தார். அப்போது என்னை ரிப் பம்புகள் அகற்றப்பட்ட மெழுகு அங்கு கிடைப்பதை அறிந்தார். எண்ணெய் தொழிலாளர்கள் வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த இந்த பொருளை பயன்படுத்தினர்.

   

பின்னர் இந்த மெழுகின் மாதிரிகளை எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடிய பெட்ரோலியம் ஜெல்லியை பிரித்து எடுத்து Vaseline என்று அழைக்கப்படும் புதிய பொருளை தயாரிக்க தொடங்கினார். 1872 ஆம் ஆண்டு செஸ்ப்ரோ தனது அமெரிக்க காப்புரணி உரிமையில் Vaselineனை அறிமுகப்படுத்தியது.

 

Unileverக்கு சொந்தமான பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த தயாரிப்புகளின் ஒரு அமெரிக்க பிராண்டாகும். இந்த தயாரிப்புகளில் ஆரம்பத்தில் பெட்ரோலியம் ஜெல்லி மட்டுமே ஸ்கின் கேரில் வந்த நிலையில் தற்போது ஸ்கின் க்ரிம்கள் சோப்புகள் லோஷன்கள் போன்ற பல பிராண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

Vaseline 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்கின் காரில் பெரிதாக உபயோகப்படுத்தப்பட்டது. இதை மாய்ச்சரைராக பயன்படுத்தும் போது தோல் நீரை தக்க வைக்க உதவுகிறது. பெட்ரோலியம் ஜெல்லி வாசலில் உள்ள மூலப்பொருள் வெள்ளை பெட்ரோலியத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு எடுப்பதாகும். இன்றைய ஸ்கின் கேர் நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையாகி வந்து கொண்டிருக்கிறது இந்த Vaseline என்றால் மிகையல்ல.