சன் டிவியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பிரபலமானவர் அஸ்வந்த். இவரும் விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த பிரபலமான கண்மணியும் திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே இணையத்தில் செய்திகள் உலா வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

கண்மணி ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் மூலம் பிரபலமானார். பல வருடங்களாக அந்த சீரியல் ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவடைந்தது. அதன் பிறகு வேறு எந்த சீரியலிலும் கண்மணி நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். புது சீரியலில் கமிட்டான கையோடு திருமணத்தையும் கண்மணி அறிவித்தார்.

அஸ்வந்த் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்மணியும் அஸ்வந்த்தும் தங்களது திருமண பத்திரிகையை பிரபலங்களுக்கு கொடுத்தனர். ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கு இருவரும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தனர். அப்போது கண்மணி ரஜினிகாந்தின் மனைவி லதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

மேலும் பிரபல நடிகரான விஜய் சேதுபதிக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. சமீபத்தில் தான் இருவரும் ஹெல்தி பங்ஷனை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் அஸ்வந்துக்கும் கண்மணிக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title
