தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் உச்சபட்ச நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் விஜய். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக தன்னை தக்க வைத்து இருப்பவர். இவரது படங்கள் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் GOAT.

GOAT திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது நடிகர் விஜயின் 68 வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் GOAT திரைப்படத்தில் பல சப்ரைஸ் காட்சிகள் இடம் பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பம் மூலம் இத்திரைபடத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. உலகம் முழுவதும் செப்டம்பர் ஐந்தாம் தேதி GOAT படம் வெளியானது. அது மட்டுமல்லாமல் படம் வெளியான அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஸ்கிரீன்களிலும் GOAT திரைப்படம் தான் வெளியிடப்பட்டது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரே நடிகரின் படம் அனைத்து ஸ்கிரீன்களிலும் திரையிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

GOAT திரைப்படம் வெளியான ஒரு நாளில் 126 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதற்குப் பிறகு வசூலில் சற்று பின்னடைவை சந்தித்த GOAT தற்போது பத்து நாட்கள் நிறைவடைந்த நிலையில் ரூபாய் 360 கோடி வசூலித்துள்ளது. இனிவரும் நாட்களில் 500 கோடியை தொடுமா என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
