கர்ப்பமான நேரத்தில் இதெல்லாம் தேவையா?… வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி… கேள்வி எழுப்பும்நெட்டிசன்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

   

இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி.

இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

இவர் தற்பொழுது ‘ மாவீரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ட்ரெண்டிங் பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலுக்கு ரிலீஸ் செய்து வீடியோ ஒன்றை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘கர்ப்ப காலத்தில் இதெல்லாம் தேவையா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)