பிரம்மாண்ட வீட்டினை கட்டியுள்ள சீரியல் நடிகை காயத்ரி… ஒன்று கூடிய குடும்பம்… புது வீட்டின் கிரகப்பிரவேச வீடியோ இதோ …

By Begam on மாசி 19, 2024

Spread the love

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

   

இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

   

 

இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் இவருக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது.

இவர் அவ்வப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தான் புதிதாக  கட்டியுள்ள  பிரம்மாண்ட வீட்டின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை காயத்ரிக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)