சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார்.

சமீபத்தில் இவருக்கு பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு நடந்துள்ளது. இந்நிலையில் இன்று அவர் 2-வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்பொழுது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காயத்ரியின் கணவர் யுவராஜ். இன்று சீரியல் நடிகை காயத்ரியின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பதிவு…
View this post on Instagram
