இப்போ தான் அவரோட உண்மையான முகம் தெரியுது.. 2-வது கணவரின் கொடுமையால் கதறி அழும் சீரியல் நடிகை தீபா..

By Deepika

Updated on:

தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் தயாரிப்பு மேலாளர் சாய் கணேஷ் பாபுவை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வந்தது.

serial actress deepa and babu

சாய் கணேஷ் பாபு வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக கூறினர். காரணம் சீரியல் நடிகை தீபாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார், கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர்.

   
serial actress deepa and babu

காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்ந்து வைக்கக் கோரி சின்னத்திரை தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை தீபா தொடர்ந்த வழக்கில் கணேஷ் பாபு காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் தற்போது அவர் பிரிந்து வாழ்வதால் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

serial actress deepa about her husband

இதுகுறித்து மனமுடைந்து பேட்டி கொடுத்துள்ளார் தீபா, அவர் கூறியுள்ளதாவது, பாபுவுடன் நான் 11 வருடங்கள் தோழியாக பழகியுள்ளேன், அவர் நல்ல மனிதர் என நினைத்து தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டேன் ஆனால் திருமணத்திற்கு பின் தான் அவரின் குணமும் அவரின் குடும்பத்தாரின் உண்மை குணமும் எனக்கு தெரிய வந்தது. என்னை மிகவும் துன்புறுத்தினர்.

serial actress deepa about her husband

நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்த பெண் தான், ஆனால் நானே கேட்காத கெட்ட வார்த்தைகள் சொல்லி தான் என்னை திட்டுவார். அவரின் குடும்பம் என் ஜாதியை பற்றி சொல்லி என்னை இழிவுப்படுத்தினர். முதலில் எல்லாம் சரியாகி விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் நிலைமை மோசமாகி வருகிறது. அனைத்து பிரச்னையும் முடிந்து சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் ஆனால் என்னை ஏமாற்றி விட்டனர் என கண்ணீர் மல்க பேசியுள்ளார் நடிகை தீபா.

author avatar
Deepika