காபி சாப்பிட வந்த பிரகாஷ்ராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஹோட்டல் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Ranjith Kumar

Published on:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பெங்களூரைச் சார்ந்தவர். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர்,  தொலைக்காட்சி தொகுப்பாளர்,  தயாரிப்பாளர் என பன்முக  திறமை கொண்டவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில்  இவர் ‘காஞ்சிபுரம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்து , 2007 ஆம் ஆண்டு  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.


இவர் ‘இருவர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக 1998 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். தமிழ் திரைஉலகில்  தோனி, அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம், சிங்கம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பீமா என தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1994 நடிகை லலிதா குமாரி என்பவரை  மணந்தார். அவர்களுக்கு மோகனா, பூஜா என்று இரண்டு மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளார்.

   

திருமணம் ஆகி சில ஆண்டுகளில்  தனது மனைவியை விவாகரத்து செய்தார். 2010 ஆம் ஆண்டு நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இவருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். தற்போது பிரகாஷ் ராஜின் ஃபேன் பாய் சம்பவம் ஒருவர் செய்துள்ளார்; கெம்பகோஹோடா இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு சென்றிருந்த பொழுது, எப்போதும் வழக்கமாக பிரகாஷ்ராஜ் அவர்கள் அங்குள்ள காபி ஷாப்க்கு செல்வார், ஆனால் அங்கு வந்தாலே பரபரப்பாக சாப்பிட்டு செல்லும் பிரகாஷ் ராஜ், தற்போது நேற்று நிதானமாக இருந்து சாப்பிட்ட சமயத்தை சரியாக பயன்படுத்திய ரசிகர் ஒருவர், காபியை பரிமாறும் பொழுது கொண்டு போகும் பாக்ஸில்,

‘நான் உங்கள் தீவிர ரசிகன், ஸ்டார் பாக்ஸ்க்கு வருகை தந்ததற்கு நன்றி. எங்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள்’ என்று ஹார்ட்டின் போட்டு பிரகாஷ் ராஜா அவர்களை வெல்கம் செய்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் அங்குள்ள ஊழியர். இதை கண்ட பிரகாஷ் பிரகாஷ்ராஜ் முகம் வளர்ச்சியுடன் சிரித்து நன்றி சொன்னார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Prince Dahal (@ashishdahalll)

author avatar
Ranjith Kumar