ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கார்த்திகை தீபம்’ . இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் நடித்து வருகிறார். ஏற்கனவே செம்பருத்தி சீரியல் மூலமாக ஜீ தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருந்த இவர் ஒரு சில வருடங்களாக சீரியலில் இருந்து விலகி இருந்து மீண்டும் இந்த சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனாலே இவருடைய இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்த சீரியலுக்கு புது நடிகை கதாநாயகியாக நடிகை அர்திகா களமிறங்கி கலக்கி வருகிறார். கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடிக்கும் அர்திகா நிஜத்தில் இந்த சீரியலில் வருவது போல கருப்பாக இருக்க மாட்டார். நிஜத்தில் இவர் செம கலராக இருப்பார். நடிகை அர்திகா இதுவரை சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
நடிகர் கார்த்திக் ராஜ் நடித்த ‘பிளாக் அண்ட் ஒயிட்’ திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த சீரியல் கருப்பாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வளவு அவமானங்களும், புறக்கணிப்புகளும் ஏற்படுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது. தற்பொழுது இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார் நடிகை அர்திகா.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , திடீரென தற்பொழுது தனக்கு திருமணமாகி விட்டது என கூறி தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒருபுறம் அதிர்ச்சி அடைந்தாலும், மறுபுறம் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…